தேங்காய்களுக்கு விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை
வடமாநிலங்களில் தற்போது சுப முகூர்த்த நாட்கள் இல்லாததால் தேங்காய் விற்பனை மந்தமாகி, விலை கிடைக்காததால் திண்டுக்கல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வடமாநிலங்களில் தற்போது சுப முகூர்த்த நாட்கள் இல்லாததால் தேங்காய் விற்பனை மந்தமாகி, விலை கிடைக்காததால் திண்டுக்கல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி, அஞ்சுகுழிபட்டி, கோணப்பட்டி, செங்குறிச்சி, நத்தம், பரளி, லிங்கவாடி, மணக்காட்டூர்,சிறுகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஏக்கர்களில் தேங்காய் விவசாயம் செய்யப்படுகிறது. இந்தப் பகுதியிலிருந்து தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வேம்பார்பட்டி குடோனில் தேக்கி வைக்கப்படுகிறது.இங்கிருந்து மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், ராஜஸ்தான்,டெல்லி உள்ளிட்ட 15 மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.தற்சமயம் வடமாநிலங்களில் சுப முகூர்த்த நாட்கள் இல்லாததால் தேங்காய் விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் ஏற்றுமதி தடைபட்டு தேங்காய்கள் தேக்கம் அடைந்துள்ளன.
Next Story