தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது, இதில் வேளான்மை துறை சார்ந்த அரசு திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இதனை தொடர்ந்து விவசாயிகள் தெரிவிக்கும் போது, தமிழக பட்ஜெட்டில், பெரம்பலூர் மாவட்டத்திற்கு கூட்டு குடிநீர் திட்டத்திற்கும் மேலும் வறட்சி மற்றும் படைப்புழுக்கள் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் பயிற்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதர்க்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் மரவள்ளி கிழங்கு பயிர்கள் மாவு பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த ஒட்டுண்ணிகளை விவசாயிகளுக்கு குறைந்த விலையில்விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், விளைவிக்கப்பட்ட பயிர்களை காய வைப்பதற்காக உலர் களம் இல்லாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர் அவர்களுக்கு கிராமம் தோறும் உலர் களம் அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் முன்வைத்தனர். இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வடிவில் பிரபு மற்றும் வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.