முதலமைச்சரை சந்தித்து விவசாயிகள் சங்கத்தினர் மனு!
மனு அளித்த விவசாய சங்கத்தினர்
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அறையில் தமிழக விவசாயிகள் சங்கத்தினருடன், இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர், G.S.தனபதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் வேளாண் அமைச்சர், வேளாண் உற்பத்தி ஆணையர், வேளாண் இயக்குனர், வனத்துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து நெல்லுக்கு ஊக்கத் தொகை கிலோவுக்கு, ரூபாய் 1.05, 1.30 காசுகள் உயர்த்தி வழங்கியமைக்கும்,
புதுக்கோட்டை மாவட்டத்தில் தைல மரங்களை அகற்ற சுற்றுச்சூழல் அமைச்சர் மாண்புமிகு சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் முதல்வரின் முன்னிலையில் அறிவித்தமைக்கும் நன்றி தெரிவித்ததோடு, காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு இந்த நிதியாண்டு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்,
காடுகளில் உள்ள தைலமரங்களை உடனடியாக அகற்றி காப்புக்காடுகளில் உள்ள தண்ணீர் தடுப்பணைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவும் மற்றும் கள் இறக்க்க அனுமதி பாமாயில் இறக்குமதியை குறைத்து உள்நாட்டு எண்ணெய் வகைகளான,
நல்லெண்ணை, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தவும், வேளாண்மை பற்றிய சிறமங்களை குறித்த மனு அளித்த சமயம்.