கள் இறக்க அனுமதி வழங்கக்கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் மற்றும் டாஸ்மார்க் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்து கொண்டு அதை குடித்து பல விவசாயிகளும், பல பொதுமக்களும் உயிரிழந்த வருகின்றனர் இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பாரம்பரிய கள் இறக்கும் தொழிலை மேம்படுத்தி பனைமரத்திலும் தென்னை மரத்திலும் கள் இறக்கி விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என விவசாய சங்கம் சார்பில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் கேரளா கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி இருந்த போதிலும் தமிழகத்தில் மட்டும் கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்காத தமிழக அரசை கண்டித்து விவசாய சங்கம் சார்பில் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் மண்பாணையில் கள்ளை எடுத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் 58 கிராம கால்வாய் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.