மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
திருமருகல் அருகே மத்திய அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வடகரை தபால் அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ் முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி கட்டுப்படுத்த வேண்டும்,மின்சார திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும்,விவசாயிகளுக்கு விதை மற்றும் உரம் பூச்சிக்கொல்லி மருந்து மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.இதில் விவசாய சங்க மாவட்ட பொறுப்பாளர் சித்தார்த்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் பாபு,மாவட்ட பொருளாளர் பொன்மணி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story