திரவ உயிர் உரங்களை பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு அழைப்பு

திரவ  உயிர்  உரங்களை பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு அழைப்பு

மண்வளம் காத்து அதிக மகசூல் பெற திரவ உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும் என பெரம்பலூர் விவசாயிகளுக்கு வேளாண் இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார்.

மண்வளம் காத்து அதிக மகசூல் பெற திரவ உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும் என பெரம்பலூர் விவசாயிகளுக்கு வேளாண் இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ள தகவலில், விளைநிலங்களின் உயர் விளைச்சல் ரகங்களுக்கு தொடர்ந்து இரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்துவதால் மண்வளம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திரவ உயிர் உரங்கள் இடுவதன் மூலம் மண்ணின் வளத்தை நிலைநிறுத்தி நிலையான உணவு உற்பத்தியைப் பெற முடியும். விவசாயிகள் தங்கள் வேளாண் நிலங்களின் மண்வளத்தை பாதுகாக்கவும, அதிக மகசூல் மூலம் கூடுதல் வருமானம் பெறவும் திரவ உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும்.

இரசாயன உரங்களை தொடர்ச்சியாக பயிர்களுக்கு இடுவதால் மண்ணின் தன்மை மாறுபாடைந்து மண்வளம் குன்றுகிறது. மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்து வருகிறது. இதனை தவிர்க்க உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் உள்ள உயிரியியல் செயல்பாட்டை அதிகப்படுத்தி மண்வளத்தை பாதுகாப்பதன் மூலம் நீடித்த நிலையான வேளாண்மைக்கு வழிவகுக்கலாம். உயிர் உரங்களை இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுடன் கலந்து உபயோகிக்கக்கூடாது. உயிர் உரங்களை குறைந்த வெப்பத்தில் நேரடி சூரிய வெப்பம் படாமல் பாதுகாத்து வைக்க வேண்டும். விதைகளை பூஞ்சாண கொல்லியுடன் விதை நேர்த்தி செய்து பின்பு கடைசியாக உயிர் உரங்களுடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

இத்திட திரவ உயிர் உரங்கள் 500 மில்லி அளவுள்ள கொள்கலன் ஒன்றின் விலை ரூபாய் 150/- ஆகும். எனவே விவசாயிகள் திட திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி மண்வளம் காத்து அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண்டும். என வேளாண்மை இணை இயக்குநர் கீதா மே- 13ம் தேதி வெளியிட்டுள்ள தெரிவித்துள்ளார்.

Tags

Next Story