வாய்க்கால் நீர் வரும் என்ற நம்பிக்கையில் விவசாயத்தை துவக்கிய விவசாயிகள்

வாய்க்கால் நீர் வரும் என்ற நம்பிக்கையில் விவசாயத்தை துவக்கிய விவசாயிகள்

 விவசாயிகள்

குமாரபாளையம் அருகே வாய்க்கால் நீர் வரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் விவசாயத்தை துவக்கினர்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, குப்பாண்டபாளையம் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்கால் உள்ளது. வழக்கமாக ஆண்டுதோறும் ஜூலை மாத இறுதியில் இந்த வாய்க்காலில் விவசாய பணிகள் மற்றும் குடிநீர் ஆதாரத்திற்காக தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால், இதுவரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் நிலத்தடி நிர்மட்டம் குறைந்து வருகிறது. கால்நடைகளுக்கு போதுமான தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நெல் பயிரிடபட்டு ஒரு போகம் அறுவடை செய்திருக்கும் நேரம் இது. ஆனால், தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வந்தனர். இந்நிலையில் சில நாட்களாக மழை குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தமிழக அரசு சார்பில் செய்து வரும் முயற்சியாலும், உச்ச நீதிமன்ற உத்திரவுப்படியும், காவிரி நீர் மேலாண்மை குழு நடவடிக்கையின் பேரிலும், கர்நாடக அரசால் தண்ணீர் திறக்கபட்டு, மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படும் என்ற நம்பிக்கையில், குப்பாண்டபாளையம் பகுதியில் விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுது, நாற்று விட்டுள்ளனர்.

Tags

Next Story