உப்பளங்களில் வெள்ள நீர் வடியாததால் விவசாயிகள் கவலை

உப்பளங்களில் வெள்ள நீர் வடியாததால் விவசாயிகள் கவலை

 மரக்காணம் உப்பளங்களில் வெள்ள நீர் வடியாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

மரக்காணம் உப்பளங்களில் வெள்ள நீர் வடியாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் மத்திய மாநில அரசுகளுக்கு சொந்தமான சுமார் 3500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளது. இப்பகுதியில் ஆண்டுதோறும் உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணிகள் டிசம்பர் மாதம் துவங்குவது வழக்கம் .இதனைத் தொடர்ந்து ஜனவரி இரண்டாவது வாரத்தில் தை பொங்கல் அன்று சூரிய பகவானை வேண்டி முதல் முதலில் உப்பு உற்பத்தியை துவங்குவார்கள். இதுபோல் உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணிகள் துவங்கி அப்பணிகள் முடியும் நிலையில் இருந்தது.

இதனால் தைப்பொங்கல் அன்று உப்பு உற்பத்திய துவங்க உப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியாக காத்திருந்தனர். ஆனால் பருவம் மாறி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இப்பகுதியில் கன மழை பெய்தது. இந்த கனமழையால் உப்பளங்களில் வெள்ளம் சூழ்ந்து தற்பொழுது கடல் போல் காணப்படுகிறது. இந்த மழை நீர் வடிந்து மீண்டும் உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணிகளை துவங்க குறைந்தது ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் என உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இதனால் இத்தொழிலை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது நடைபெற்ற முதற்கட்ட பணிகள் மழையால் பாதிக்கப்பட்டதால் பல லட்ச ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.

Tags

Next Story