புதுகை விவசாயிகளுக்கான கண்டுணர்வு பயணம் தொடக்கம்!

புதுகை விவசாயிகளுக்கான கண்டுணர்வு பயணம் தொடக்கம்!


பொன்னமராவதி விவசாயிகளின் 5 நாள் கண்டுணர்வு பயணம் தொடங்கியது.


பொன்னமராவதி விவசாயிகளின் 5 நாள் கண்டுணர்வு பயணம் தொடங்கியது.

பொன்னமராவதி விவசாயிகளின் 5 நாள் கண்டுணர்வு பயணம் தொடங்கியது. பொன்னமராவதி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ், 'மானாவாரி நில வேளாண்மை' எனும் தலைப்பில் விவசாயிகள் கண்டுணர்வு பயணம் தொடங்கியது.

நிகழ்வுக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி தலைமை வகித்தார். வேளாண்மை துணை இயக்குனர் மரியம் ரவிஜெயக்குமார் 5 நாள் கண்டுணர்வு பயணத்தை தொடங்கிவைத்தார். வெளிமாநில அளவிலான விவசாயிகளுக்கான இந்த கண்டுணர்வு பயணமானது, பெல்லாரியில் அமைந்துள்ள இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி பொன்னமராவதி, புதுக்கோட்டை, திருமயம், அன்னவாசல், திருவரங்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த விவசாயிகள் 20 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் தலைவர், மற்றும் விஞ்ஞானி ராவ், மானாவாரி நில நீர் மேலாண்மை முறைகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கினார். மேலும் பண்ணைக்குட்டை அமைப்புகள் மரங்கள் வளர்ப்பு, மண் பரிசோதனை குறித்து ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் விளக்கினர். பொன்னமராவதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ரஹ்மத்பேகம், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பிரசாத், நவீன்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Tags

Next Story