கருங்கல் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை.
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள கப்பியறை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (58). விவசாயியான இவர் கடன் வாங்கி விவசாயம் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது பெய்து வரும் பெரும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கனகராஜ் விவசாயம் செய்த பயிர்களை வெள்ளம் அடித்து சென்றுள்ளது. இதனால் மணமுடைந்த நிலையில் இருந்த கனகராஜ் சில நாட்களுக்கு முன்பு விவசாயத்திற்கு பயன்படுத்தும் களைக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு வீட்டின் அருகே மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் கனகராஜ் பரிதாபமாக இருந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்
Next Story