திருப்பூர் குமரன் கல்லூரியில் அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி
ஆடை வடிவமைப்பு போட்டி
திருப்பூரில் குமரன் கல்லூரி மாணவிகள் சார்பில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கூட்டுறவுத் துறையின் கீழ் திருப்பூர் மங்கலம் சாலையில் செயல்பட்டு வரும் திருப்பூர் குமரன் மகளிர் கலை கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்குள்ள ஆடை வடிவமைப்புத் துறையின் சார்பில் பேஷன் எக்சலெட் 2024 எனும் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மூன்றாம் ஆண்டு ஆடை வடிவமைப்பு துறை மாணவிகள் 12 குழுக்களாக புதுவிதமான ரெட்ரோபேஷன் , எத்தநிக் ஃபியூஷன், பேப்ரிக் மேனுபுலேஷன், ரெட் கார்பெட் என 12 குழுக்களாக பல்வேறு தலைப்புகளில் ஆடைகளை வடிவமைத்து காட்சியமைத்தனர். இதில் ஆடை வடிவமைப்பு துறை பேராசிரியரும் துறை தலைவருமான கற்பகம் சின்னம்மாள் நடுவராக இருந்து சிறந்த ஆடை வடிவமைப்பாளர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கினார்.
இதன் மூலம் மாணவிகளின் தனித்திறமை வளர்வதோடு சமூகத்தில் தங்கள் திறமையை வெளிக் கொண்டு வரவும் இது போன்ற நிகழ்ச்சிகள் உதவிகரமாக இருக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இது போன்ற நிகழ்ச்சிகள் தங்களை உற்சாகப்படுத்துவதோடு மட்டுமல்லாத சமூகத்தில் விரும்பக்கூடிய ஆடை வகைகள் என்ன என்பதை தாங்கள் தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு வடிவமைப்புகளை உருவாக்க உதவிகரமாக இருக்கும் என மாணவிகள் தெரிவித்தனர்.