குமரப்பா பள்ளி சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி !

X
நோன்பு திறப்பு நிகழ்ச்சி
பேராவூரணி ஜமாலியா பள்ளிவாசலில் குமரப்பா பள்ளி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஜமாலியா பள்ளிவாசலில் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளியின் சார்பில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், குமரப்பா பள்ளி தாளாளருமான முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்தார்.
குமரப்பா அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, குமரப்பா குழுமத்தின் கல்விப்புல இயக்குனர் அஸ்வின் கணபதி, அறக்கட்டளை நிர்வாகிகள் மா.ராமு, ச.ஆனந்தன், மற்றும் முக்கியப் பிரமுகர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், இஸ்லாமியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
முன்னதாக, நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை பள்ளிவாசல் நிர்வாக ஜமாத் தலைவர் முத்தலிப் வரவேற்றார். நிறைவாக ஜமாத் பொருளாளர் கே.கான்முகமது நன்றி கூறினார்.
Next Story
