பெருந்துறை சிப்காட் அலுவலகம் முன்பு வருகிற 27 ம் தேதி உண்ணாவிரத போராட்டம்
பெருந்துறை சிப்காட் அலுவலகம் முன்பு வருகிற 27 ம் தேதி உண்ணாவிரத போராட்டம்
பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொள்வதென திட்டமிடப்பட்டுள்ளது
பெருந்துறை சிப்காட் தொழில் வளர்ச்சி மையத்திற்காக அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இழப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை இழப்பீடு கிடைக்காமல் பாதிக்கப்பட்ட கூத்தம்பாளைைம், கடப்பமடை, ஓலப்பாளையம், ஆலாங்காட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெருந்துறையில் ஆலோசனைக்கூட்டத்தை நடத்தினர். 200 ஏக்கர் நிலங்களுக்குரிய நியாயமான இழப்பீட்டுத் தொகை 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் கிடைக்காத்தால் , 100 க்கும். மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு வருவதாகவும் , எனவே உயர் நீதிமன்ற தீர்ப்புப்படியான இழப்பீட்டுத் தொகைகளை உடனடியாக வழங்கவும், உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை அரசே நிர்ணயித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி, வருகிற 27 ம் தேதி பெருந்துறை சிப்காட் அலுவலகம் முன்பு உள்ள கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் எனவும் இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
Next Story