இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் 311 படி சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது அந்த வாக்குறுதியை தற்போது வரை திமுக அரசு நிறைவேற்றாத அதை கண்டித்து சென்னையில் நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை முன்பு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது.
அப்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்வதாக கூறப்படுகிறது. இதை கண்டித்தும் தமிழக அரசு திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியின் படி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
Next Story