வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை மற்றும் மகள்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை மற்றும் மகள்
X

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை மற்றும் மகள்

மழைவெள்ளத்தில் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல முயன்ற போது வெள்ளத்தில் அடித்து செல்லபட்டு சடலமாக மீட்கப்பட்டனர்

தூத்துக்குடி மாவட்டம் முத்தம்மாள் காலனி ஆதிபராசக்தி நகரில் வசித்து வருபவர் அமலன் (47). எலெக்ட்ரிசியன் வேலை பார்த்து வருகிறார். மற்றும் இவர் மனைவி ஷாமினி (44). இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள். மூத்த பெண் ஆன்சி (22), இளையபெண் அக்ஷிதா (20) இரண்டு மகள்கள். தூத்துக்குடி பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தூத்துக்குடி நகரில் அதிகம் பாதிக்கப்பட்ட முக்கிய பகுதிகளில் குறிப்பிடத்தக்க அதிக பாதிப்புக்கு உள்ளான பகுதி என்றால் முத்தம்மாள் நகர் தான். இந்நிலையில், அந்த இரண்டு பகுதிகளும் கடந்த நாட்களுக்கு முன் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் ஏற்பட்டு சென்று கொண்டிருந்தது. இங்கிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அப்பா அமலன் மற்றும் இரண்டு மகள்களும் பக்கத்து வீட்டிற்கு அழைத்து சென்று விட்டு அதற்கு அப்புறம் மனைவி அழைத்து செல்லலாம் என்று நினைத்து மூவரும் தண்ணீரில் இறங்கியுள்ளனர்.

அதில் தங்கை முதலில் தண்ணீரில் இழுத்து சென்றுள்ளார். அதை பார்த்து அப்பாவும் காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால் இதில் அமலனும் தங்கை அக்ஷிதாவும் தண்ணீரில் அடித்து சென்றுள்ளனர். அப்போது அவருடைய அப்பா அவர்களை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். இருப்பினும் முடியவில்லை. அப்பா அடித்து சென்று விட்டார் இந்த கடுமையான போராட்டத்தில் உடன் பிறந்த அக்காவை காப்பாற்றிவிட்டு தம் உயிரே விட்டார் அக்ஷிதா. 2 மணி நேரமாக தண்ணீருக்குள் ஒரு கம்பை பிடித்துக் கொண்டு தனது தங்கையும் தோளில் வைத்துக் கொண்டு யாரவது காப்பாற்றுவார்களா? என்று போராடி வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பால்காரர் அவர்களை மீட்டு உள்ளார். இதை தொடர்ந்து இரண்டு நாட்களாக அவருடைய அப்பாவின் சடலம் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று அவருடைய சடலம் கிடைத்துள்ளது. இரண்டு பேருடைய சடலத்தையும் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் நடந்த இந்த சம்பவம் தூத்துக்குடி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story