விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு 10 ஆண்டு சிறை
பைல் படம்
அரியலூர் அருகே வாய்க்கால் வரப்பு தகராறில் விவசாயியை அடித்துக் கொலை செய்த வழக்கில் தந்தை, மகனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அரியலூர் அருகே சிறுவளூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதனுக்கும், கோவிந்தனுக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்தது. கடந்த 2021இல் ஏற்பட்ட வாய்க்கால் வரப்புத் தகராறில், ஆத்திரமடைந்த கோவிந்தன் மற்றும் அவரது மகன் தர்மராஜ் ஆகியோர் சாமிநாதனை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்தனர். இந்த வழக்கு விசாரணை மேற்கொண்டு வந்த அரியலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், குற்றவாளிகள் கோவிந்தன் மற்றும் தர்மராஜ் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. இதைடுத்து கோவிந்தன், தர்மராஜ் ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story