குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை முயற்சி
தற்கொலை முயற்சி
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வானரமுட்டி ராமலிங்க புரத்தைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி மகன் மாடசாமி (35). இவரது மனைவி இந்திராணி (30). இந்த தம்பதிக்கு பொன் தர்ஷன் (12), பொன் சரண்யா (8) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திராணி வீட்டை விட்டு சென்று விட்டார்.
இதுகுறித்து மாடசாமி நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மனைவி மாயமானதால் மனமுடைந்த மாடசாமி தனது 2 குழந்தைகளுகக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்துள்ளார்.
இதையடுத்து 3பேரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் வழ்ககுப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.