மாங்காடு அருகே மாமனை கத்தியால் குத்தி கொலை: வடமாநில கள்ளக்காதலர்கள் கைது

மாங்காடு அருகே மாமனை கத்தியால் குத்தி கொலை: வடமாநில கள்ளக்காதலர்கள் கைது

கைதான கள்ளக் காதலர்கள்

மாங்காடு அருகே மாமனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு நாடகமாடிய வடமாநில கள்ளக்காதலர்கள் கைது செய்யப்பட்டனர்.

மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வரும் நிலையில் வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் இங்கு தனித்தனியாக தங்கி வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மோகன் புஜக்கர்(38), இவரது உறவினரான சோனியா(33), என்பவர் வீட்டில் தனக்குத்தானே கத்தியால் குத்திக்கொண்டு மோகன் புஜகர் இறந்து கிடப்பதாக மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,

மாங்காடு இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் விரைந்து சென்ற போலீசார் அந்த மோகன் புஜகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் மோகன் புஜகர் தனக்குத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் கத்தியால் மற்றொருவர் குத்தியதில் இறந்து போனதாக அறிக்கை வந்ததையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் சோனியா மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சுசாந்தா பர்மன்(44), ஆகிய இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தனது மாமாவான மோகன் புஜகர் இங்கு தங்கி வேலை செய்து வந்த நிலையில் சோனியாவிற்கும்,

சுசாந்தா பர்மன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது இந்த நிலையில் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து சென்றதால் மோகன் புஜகர் கண்டித்து உள்ளார். சம்பவத்தன்று சுஷாந்தா பர்மன் வீட்டிற்கு வந்து சோனியாவிற்கு வளையல் அனிவித்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மோகன் புஜகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த சுசாந்தாபர்மன் மறைத்து வைத்திருந்த கத்தியால் மோகன் புஜகர் மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனதும் மேலும் தங்கள் போலீசில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க மோகன் புஜகர் தனக்குத்தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடியதும் அம்பலமானது இதையடுத்து சோனியா மற்றும் சுஷாந்தா பர்மன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

Tags

Next Story