இரண்டு குழந்தைகளின் தந்தை தற்கொலை .
தற்கொலை
சேலம் மாவட்டம், தாதகாப்பட்டி பகுதியில் மது அருந்துவதை நிறுத்த கோரியதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஹரி பிரகாஷ் (வயது 45 ) இவர் கிரானைட் நிறுவனம் ஒன்றுக்கு வேலைக்கு சென்று வந்தார். ஹரி பிரகாசுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மது போதைக்கு அடிமையான ஹரி பிரகாஷ் ,தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் மது குடிப்பதை நிறுத்துமாறு வற்புறுத்தி வந்தனர். இந்த நிலையில் ஹரி பிரகாஷ் இன்று அதிகாலை வீட்டில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சடலத்தைஅன்னதானப்பட்டி போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story