விபத்தை ஏற்படுத்தும் விளம்பரம் போர்டால் அச்சம்

விபத்தை ஏற்படுத்தும் விளம்பரம் போர்டால் அச்சம்

திண்டுக்கல் நான்கு வழிச்சாலைக்கு விபத்தை ஏற்படுத்தும் விளம்பரம் போர்டால் பொதுமக்கள் அச்சுறுத்தலுடன் செல்கின்றனர்.

திண்டுக்கல் நான்கு வழிச்சாலைக்கு விபத்தை ஏற்படுத்தும் விளம்பரம் போர்டால் பொதுமக்கள் அச்சுறுத்தலுடன் செல்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி , நகராட்சி , பேரூராட்சி ஆகிய நிறுவனங்களிடம் எந்த அனுமதியும் பெறாமல் பல்வேறு இடங்களில் விளம்பர போர்டுகளை பலர் நிறுவி உள்ளனர்.இது கழன்று விழுந்தால் வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். இந்த போர்டுகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அவ்வப்போது சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த மழை காற்றால் விளம்பர போர்டு கழன்று விழுவது வாடிக்கையாக உள்ளது.திண்டுக்கல், அஞ்சலி பைபாஸ் அருகே செட்டிநாயக்கன்பட்டி பிரிவு நான்கு வழி சாலை பகுதியில் விளம்பர போர்டு அபாயகரமாக தொங்கி கொண்டிருக்கிறது.விபத்து ஏற்படுவதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story