கூழாங்கல்சேரியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் விபத்து அச்சம்
கூழாங்கல்சேரி கிராமத்தில் மின்கம்பிகள் சில இடங்களில் மிகவும் தாழ்வாக உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியம், கூழாங்கல்சேரி கிராமத்தில் இருந்து, அழகூர், மாகாணியம் செல்லும் சாலை பிரிந்து செல்கிறது. இந்த சாலையின் ஓரம், மின் கம்பங்கள் வழியாக, மின்வழித்தடம் செல்கிறது. இந்த நிலையில், மின் ஒயர்கள் சில இடங்களில் மிகவும் தாழ்வாக உள்ளது.
இதனால், இந்த சாலையில் செல்லும் பள்ளி பேருந்து, தாழ்வாக செல்லும் மின் ஒயரில் கம்பியில் உரசி, மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, படப்பை மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, தாழ்வாக செல்லும் மின் ஒயரை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story