சாலை ஓரத்தில் முட்புதரால் அச்சம்

சாலை ஓரத்தில் முட்புதரால் அச்சம்
X

கோக்கலை - பெரியமணலி சாலையின் இருபக்கத்திலும் முட்புதர்கள் காணப்படுவதால், விஷ ஜந்துகளால் அசம்பாவிதம் ஏற்படக்கூடும் என பலரும் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

கோக்கலை - பெரியமணலி சாலையின் இருபக்கத்திலும் முட்புதர்கள் காணப்படுவதால், விஷ ஜந்துகளால் அசம்பாவிதம் ஏற்படக்கூடும் என பலரும் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
கோக்கலையில் இருந்து பெரியமணலி செல்லும் சாலையின் இருபுறங்களில் அதிகளவில் முட்புதர்கள் காணப்படுவதால், மக்கள் விஷ ஜந்துக்களால் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் சென்று வருகின்றனர். எலச்சிபாளையம் ஒன்றியம், கோக்கலை கிராமத்தில் இருந்து பெரியமணலி செல்லும் சாலையின் இருபுறங்களிலும் அதிகளவில் முட்புதர்கள் நிறைந்து காணப்படுகின்றது. அடிக்கடி விசஜந்துக்கள் உலாவிவருவதால் இவ்வழியாக செல்லும் மக்கள் மற்றும் மாலை நேரங்களில் டியூசன் முடித்து செல்லும் மாணவர்கள் விசஜந்துக்களை பார்த்து அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட பணியாளர்களை கொண்டு, சாலையின் இருபுறங்களிலும் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story