பிப்.16 திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு வருகை
கனிமொழி எம்.பி
கனிமொழி எம்பி தலைமையில் திருச்சியில் வரும் 16ம் தேதி நடக்கும் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டத்தில் தொழிற்துறையினர், கல்வியாளர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள். மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்,
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தலைமைக்கழக அறிவிப்பின்படி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணியளவில் தஞ்சாவூர் -நாகை பிரதான சாலையில் உள்ள குருதயாள் சர்மா திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட தொழிற்துறையினர், கல்வியாளர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள். மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகளான மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், கிளைக் கழக, வார்டு கழக, வட்ட கழக செயலாளர்கள். வாக்குச்சாவடி நிலைக்குழு முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள், கழக தோழர்கள், உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் நேரடியாக சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள், பரிந்துரைகளை பெற இருப்பதால் மேற்கண்ட கூட்டத்தில் அனைவரும் தவறாது கலந்து கொண்டு தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டிய கோரிக்கைகள், மற்றும் பரிந்துரைகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Next Story