விக்கிரவாண்டி அருகே திறந்து வெளி கிணற்றில் மலம்?

விக்கிரவாண்டி அருகே திறந்தவெளி கிணற்றில் மலம் இருந்ததாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகேயுள்ள கே ஆர் பாளையத்தில் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக கே ஆர் பாளையம் ஏரிக்கரை அருகே திறந்த வெளி கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் மேல் நீர் தேக்க தொட்டிக்கு நீரேற்றம் செய்து ஊராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திறந்த வெளி கிணறு வயல்வெளி மற்றும் முள் செடிகள் கொண்ட பகுதியில் அமைந்துள்ளதால் மர்ம நபர்கள் திறந்த வெளி கிணற்றில் மலம் கழித்ததாக கஞ்சனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக போலீசார் மற்றும் ஊராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மலம் என கூறபட்டது கிணற்றின் 20 அடி ஆழத்திலிருந்ததால் அதனை பாதுகாப்புடன் ஒருவரை இறக்கி வெளியே எடுத்து பார்த்தபோது அது மலம் அல்ல தேன் அடை என தெரியவந்தது.

இதனையடுத்து அதிகாரிகளும் அது மலம் அல்ல தேன் அடை என்று உறுதி செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதனையடுத்து திறந்த வெளி கினறாக உள்ளதால் உடனடியாக கம்பி வேலை அமைத்து கிணற்றின் மேல் பகுதியை மூட உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் ஊராட்சி அதிகாரிகள் கிணற்றில் மின் கம்பி வேலி அமைக்கும் பணியை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story