குமரி மாவட்ட டோல்கேட்டில் கட்டண உயர்வு அமல் !!

குமரி மாவட்ட டோல்கேட்டில் கட்டண உயர்வு அமல் !!

டோல்கேட்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுங்க சாவடிகளில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டண சீரமைப்பு அமல்படுத்தப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுங்க சாவடிகளில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டண சீரமைப்பு அமல்படுத்தப்படும். இந்த நிலையில் நாகர்கோவில் - காவல்கிணறு நான்கு வழிசலையில் திருப்பதிசாரம் உள்ளிட்ட 6 இடங்களில் டோல்கேட் உள்ளது. இவைகளில் கடந்த ஏப்ரல் மாதம் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது.

ஆனால் தேர்தலை ஒட்டி கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12:00 மணி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அதன்படி கார், ஜீப், வேன் அல்லது லெகு ரக வாகனத்திற்கு ஒரு வழிமுறை பயணம் செய்ய நாள் ஒன்றுக்கு 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே நாள் திரும்ப பயணம் செய்ய கட்டண ரூபாய் 65 ஆகும். இந்த கட்டணம் ரூபாய் 60 லிருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இலகு ரக வாகனம் ஒரு மாதத்திற்கு 50 தடவை வழி முறை பயணம் செய்ய வழங்கப்படும் மாதாந்திர கடவுச்சீட்டு கட்டணம் 1410 ரூபாய் ஆகும். இது ரூபாய் 1375 ஆக இருந்தது. இந்த கட்டண முறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

Tags

Next Story