கிராமசபை கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவரை கண்டித்து பெண் கவுன்சிலர் தர்ணா

கிராமசபை கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவரை கண்டித்து பெண் கவுன்சிலர் தர்ணா

தர்ணாவில் ஈடுபட்ட பெண் கவுன்சிலர் லட்சுமி 

திருப்பத்தூர் அருகே கிராமசபை கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவரை கண்டித்து பெண் கவுன்சிலர் தர்ணா போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராம பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்நிலையில் உடையாமுத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.கிராம ஊராட்சி தலைவராக விஸ்வநாதன் உள்ளார். அதேபோல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேச்சை வேட்பாளர் லட்சுமி வார்டு கவுன்சிலராக உள்ளார்.இந்நிலையில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் தீர்மானங்கள் வாசிக்கும்போது கவுன்சிலர் லட்சுமி ஏன் என் பெயரை நோட்டிசில் போடவில்லை, ஒவ்வொருமுறையும் இதே போன்று என்னை அவமானப்படுத்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு ஊராட்சி பஞ்சாயத்து தலைவர் விஸ்வநாதன் ஒருமையில் பேசியதாகவும், தாக்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது இருவரும் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. பஞ்சயாத்து தலைவரை கண்டித்து பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் இரு தரப்பினரையும் சமாதானபடுத்தினர். கிராம சபை கூட்டம் பாதியிலேயே முடிந்தது.

Tags

Next Story