பெண்களைப் போற்றும் விதமாக பென்சிலில் பெண் வடிவம்
பெண்களைப் போற்றும் விதமாக பென்சிலில் பெண் வடிவம்
பெண்களை போற்றும் விதத்தில், மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக உலக நாடுகள் கடைப்பிடித்து வருகின்றன. மாமல்லபுரம் சிற்பக் கலைஞர் பிரேம்குமார், 25, என்பவர், மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களை போற்றும் விதமாக, பென்சிலில் பெண் சிற்பம் வடித்துள்ளார். ஒரே பென்சிலை இரண்டாக பிளந்து, அதன் ஒரு கார்பைடு முனையில் பெண்ணையும், மற்றொரு கார்பைடு முனையில் பெண்ணை வணங்கும் ஆணையும், தலா 1. 4 செ. மீ. , உயரம், 3 மி. மீ. , அகல அளவில், 1: 30 மணி நேரத்தில் வடித்துள்ளார். இது குறித்து, பிரேம்குமார் கூறியதாவது: பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள். ஆணிற்கு பெண் சமம் என்ற போதிலும், தற்காலத்திலும் ஆணாதிக்கத்தில் தான், பெண்கள் உள்ளனர். அடிமைத்தனம் முற்றிலும் ஒழிய வேண்டும். தற்காலத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட கொடூரங்கள் அதிகரிக்கப்பதை தடுக்க வேண்டும். ஆண்களின் வாழ்விலும், அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக உள்ள பெண்களை, மகளிர் தினத்தில் மட்டும் போற்றாமல், எப்போதுமே போற்றி கவுரவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story