பெண் அரசு பஸ் கண்டக்டர்

பெண் அரசு பஸ் கண்டக்டர்

பெண் நடத்துனர்

கணவரை இழந்த பெண் மதுரையில் அரசு பஸ் கண்டக்டராக பணியில் சேர்ந்ததற்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

ரம்யா மதுரை கோ.புதூர் லூர்து நகரில் வசித்து வருபவர். இவருக்கு பாலாஜி என்ற கணவரும், 9 ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். பாலாஜி கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். கொரோனாவில் பாலாஜி உயிரிந்ததை அடுத்து கருணை அடிப்படையில் இவருக்கு இந்த வேலை கொடுக்கப்பட்டுள்ளது. ரம்யாவின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அவருக்கு உடனடியாக கருணை பணி வழங்க போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

தமிழக அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தில் மதுரை உலகநேரி கிளையில் நடத்துநராக ரம்யாபணியில் சேர்ந்தார். அவருக்கு மதுரை - ராமேஸ்வரம் பேருந்தில் நடத்துனர் பணியில் உள்ளார். இவருக்கு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். இது குறித்து ரம்யா "கணவர் இறந்த நிலையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்தேன்.

என் கோரிக்கை குறித்து முதல்வருக்கு கடிதம் அனுப்பினேன். அதற்கு உடனடியாக பலன் கிடைத்தது. கணவர் ஓட்டுநராக பணிபுரிந்த கிளையிலேயே எனக்கு நடத்துநர் பணி கிடைத்துள்ளது. பெண்களால் அனைத்து பணிகளையும் திறம்பட செய்ய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக என் பணி இருக்கும். என்னைப் போல் பெண்கள் ஏராளமானோர் நடத்துநர் பணியில் சேர முன்வர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story