சாலை விபத்தில் பெண் காவலர் உயிரிழப்பு - ராஜேஷ்குமார் எம்பி நேரில் அஞ்சலி
சாலை விபத்தில் உயிரிழந்த பெண் தலைமை காவலர் அமுதாவின் உடலுக்கு எம்பி ராஜேஷ்குமார் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் வசிப்பவர் அமுதா இவருக்கு செல்வம் என்ற கணவரும் இரண்டு மகன்களும் உள்ளனர். நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக இவர் பணிபுரிந்து வந்தார். தற்போது திருச்செங்கோடு எளையம்பாளையம் பகுதியில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்தில் 8 மணி நேரம் பணியை முடித்து நேற்று முன்தினம்இரவு வீடு திரும்பிய நிலையில் பெண் காவலர் அமுதா அவர்கள் லாரி மோதி சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து இவரது உடல் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இவருக்கு மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். இதேபோல் நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினரும் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்பி கே.ஆர். என். ராஜேஷ்குமார் நேரில் வந்து அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தொடர்ந்து அவரது குடும்பத்தாரிடம் ஆறுதல் தெரிவித்தார்.
Next Story