வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற பெண் வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற பெண் வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

மைதிலி

திருப்பூரில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ. 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பெண் வருவாய் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூரில் வாரிசு சான்றிதழ் வழங்க 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பெண் வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம். திருப்பூர் ரங்க கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ஜீவா. காய்கறி வியாபாரி. இவருடைய தந்தை ராஜேந்திரன் உயிரிழந்த நிலையில் முதல்-அமைச்சரின் நிவாரண நிதி பெற வாரிசு சான்றிதழ் வேண்டி நல்லூர் நில வருவாய் ஆய்வாளர் மைதிலியை, ஜீவா அணுகிய போது வாரிசு சான்றிதழ் வழங்க 7 ஆயிரம் ரூபாய் பேரம் பேசி இறுதியில் 2 ஆயிரம் தரும்படி வருவாய் ஆய்வாளர் மைதிலி கேட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து ஜீவா, திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசாரின் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளை ஜீவா வருவாய் ஆய்வாளர் மைதிலி இடம் கொடுத்த நிலையில் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மைதிலையை கையும், களவுமாக பிடித்து கைது செய்ததோடு, வருவாய் ஆய்வாளர் மைதிலி மீது துறை ரீதியான நடவடிக்கை மேற் கொள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட நிலையில். லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர் மைதிலியை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் உத்தரவிட்டார்.

Tags

Next Story