நாய்கள் கடித்து குதறியதில் பெண் புள்ளிமான் உயிரிழப்பு

நாய்கள் கடித்து குதறியதில் பெண் புள்ளிமான் உயிரிழப்பு
X

புள்ளிமான் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருக மங்களாபுரம் பகுதியில் ஊருக்குள் வந்த பெண் புள்ளிமானை நாய்கள் கடித்து குதறியதில் பரிதாபமீக உயிரிழந்தது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மங்களாபுரத்தில் உள்ள துறையூர் திருச்சி சாலையில் அரசு மதுபான கடை அருகே பெண் புள்ளிமான் ஒன்று உயிரிழந்த நிலையில் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உயிரிழந்த பெண் புள்ளி மானை பார்த்தபோது அது நாய்கள் கடித்து குதறியதால் உயிரிழந்தது என தெரிய வந்தது. இதனையடுத்து உயிரிழந்த புள்ளி மானின் உடலை மீட்ட துறையூர் வனத்துறையினர் மங்களாபுரம் அருகே உள்ள புலிவலம் வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.தற்போது கோடைகாலமாக இருப்பதால் மங்களாபுரம் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து மான்கள் தண்ணீரைத் தேடி ஊருக்குள் வருவதால் அங்கிருந்த நாய்கள் கடித்து குதறி இருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story