காரிமங்கலம் அருகே பெண் தற்கொலை வழக்கு: இளைஞர் கைது

காரிமங்கலம் அருகே பெண் தற்கொலை வழக்கு:  இளைஞர்  கைது

காவல் நிலையம்

காரிமங்கலம் அருகே, இளம்பெண் தற்கொலை சம்பவத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் அருகே வையம்பட்டியானூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்சவேணி. இவரது கணவர் டெல்லி கணேசன். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். டெல்லி கணேசன் கொரோனா கால கட்டத்தில் உயிரிழந்த நிலையில், அம்சவேணி 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இவருக்கும், ஆர் எஸ்வி முருக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை வெங்கடேசன் பயன்படுத்தி, அம்சவேணியிடம் பணம் கடன் வாங்கியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. வாங்கிய பணத்தை திருப்பித் தருமாறு அம்சவேணி கேட்டுள்ளார். அதற்கு, பணம் கொடுக்க முடியாது. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என வெங்கடேசன் கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த அம்சவேணி, வீட்டில்தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அம்சவேணியின் தந்தை அளித்த புகாரின் பேரில், காரிமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து, வெங்கடேசனை கைது செய்தனர். பின்னர், பாலக்கோடு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story