குடும்பத் தகராறில் பெண் தற்கொலை

குடும்பத் தகராறில் பெண் தற்கொலை

தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம், மஞ்சாலுமூடு பகுதியில் குடும்ப தகராற்றில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் , அருமனை அருகே மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன். இவரது மகள் ஷைனி.திருவனந்தபுரம் அருகே குடப்பனமூடு பகுதியை சேர்ந்தவர் வருண்தரண். இவர், தனியார் வங்கியில் பணி புரிந்து வருகிறார்.ஷைனிக்கும், வருண்தரணுக்கும் கடந்த 2016ல் திருமணம் நடந்தது. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. கணவன், மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்படுவது உண்டு என கூறப்படுகிறது.

கடந்த வாரம் ஷைனி தனது இரு குழந்தைகளுடன் மஞ்சாலுமூட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து உள்ளார். இந்த நிலையில், நேற்று அவர் வீட்டிற்குள். தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவலின் பேரில், சம்பவ இடம் வந்த அருமனை போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story