கன்னியாகுமரியில் பெண் தற்கொலை

கன்னியாகுமரியில் பெண் தற்கொலை
தற்கொலை
கன்னியாகுமரியில் போதிய வருமானம் இல்லாததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி ஐகிரவுண்ட் பகுதியை சேர்ந்தவர் விஜயன் மனைவி சகாய டென்சிலின் (45). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. மகன் மாற்றுத்திறனாளி ஆவார். இந்த நிலையில் விஜயன் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் சகாய டென்சிலின் மாற்றுத்திறனாளி மகன், மகளுடன் வசித்து வந்தார். இதனால் குடும்ப செலவுக்கு போதிய வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.

மாற்றுத்திறனாளி மகனை பராமரிக்க முடியாமலும், மகளை திருமணம் செய்து கொடுக்க முடியாமலும் வருத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் சகாய டென்சிலின் நேற்று முன்தினம் படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story