"வாள்வீச்சு போட்டி காஞ்சியில் துவக்கம்"

X
வாள்வீச்சு போட்டி
வாள்வீச்சு போட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பக்தவத்சலம் பாலிடெக்னிக் கல்லுாரியில் துவங்கியது.
தமிழ்நாடு பென்சிங் அசோசியேசன் மற்றும் காஞ்சி மாவட்ட பென்சிங் சங்கம் சார்பில், மாநில அளவிலான 14 வயதிற்கு உட்பட்டோருக்கான 'பென்சிங்' எனப்படும் வாள்வீச்சு போட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பக்தவத்சலம் பாலிடெக்னிக் கல்லுாரியில் நேற்று துவங்கியது. இப்போட்டியில் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். மூன்று பிரிவுகளில், இரு நாட்கள் நடக்கும் போட்டி, நேற்று துவங்கியது. வெற்றி பெறுவோருக்கு, இன்று பரிசு வழங்கப்பட உள்ளது.
Next Story
