படகு சேவை 2 மணி நேரம் தாமதம்

படகு சேவை 2 மணி நேரம் தாமதம்

கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வானதால் படகு சேவை 2 மணி நேரம் தாமதம் ஆனது.


கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வானதால் படகு சேவை 2 மணி நேரம் தாமதம் ஆனது.
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் பள்ளி கல்லூரிகளுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். காலையில் சூரிய உதயம், மாலையில் சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசிப்பதோடு கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளூர் சிலையை படகில் சென்று பார்வையிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் இன்று காலையில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். ஆனால் கடல் சீற்றம், லெமூர் பீச்சில் கடல் அலையில் சிக்கி பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் இறந்த சம்பவம் ஆகியவற்றின் எதிரொலியாக கன்னியாகுமரி கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றும் ஐந்தாவது நாளாக தடை அமலில் உள்ளது. இருப்பினும் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு சவாரி இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை திடீரென கடல் நீர்மட்டம் தாழ்ந்து விட்டதால் காலை 8 மணிக்கு படகு சேவை தொடங்கவில்லை. இதனால் காலையிலே வந்திருந்த சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுத்துக்கொண்டு கால் தடுக்க காத்திருந்தனர். பின்னர் 2 மணி நேரம் கழித்து கடல் நீர் மட்டம் சகஜ நிலைக்கு வந்த பின்னர் படகு சேவை தொடங்கியது. இதை அடுத்து சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படகில் ஏறி சென்றனர்.

Tags

Next Story