சரக்கு ரயிலில் வந்திறங்கிய உர மூட்டைகள்

சரக்கு ரயிலில் வந்திறங்கிய உர மூட்டைகள்

பழனி ரயில் நிலையத்துக்கு தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சரக்கு ரயிலில் வந்திறங்கிய உர மூட்டைகள் வேளாண் துறை மூலம் பிற மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன.


பழனி ரயில் நிலையத்துக்கு தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சரக்கு ரயிலில் வந்திறங்கிய உர மூட்டைகள் வேளாண் துறை மூலம் பிற மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன.
பழனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. மேலும், பழனியைச் சுற்றிலும் அணைகள் இருப்பதால் விவசாயமே இந்தப் பகுதிகளில் பிரதான தொழிலாக உள்ளது. இதற்குத் தேவையான யூரியா உரத்தை திண்டுக்கல் மாவட்ட வேளாண் துறை பல்வேறு இடங்களில் இருந்தும் கொள்முதல் செய்து உரக்கடைகள், கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 1,310 டன் யூரியா உர மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் பழனிக்கு கொண்டு வரப்பட்டன. இதற்கென பழனி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட தடத்தில் ரயில் நிறுத்தப்பட்டு மூட்டைகள் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமன்றி மதுரை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் லாரிகளில் பிரித்து அனுப்பப்பட்டன. தற்போது நெல், மக்காச்சோளம் உள்ளிட்டவை அறுவடை செய்யப்பட்ட நிலையில், மழை பெய்து வருவதால் விரைவில் நிலங்களை பண்படுத்தும் பணி நடைபெறும் எனவும், இந்த நேரத்தில் உரம் அவசியம் எனவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

Tags

Next Story