வெம்பாக்கத்தில் மணிலா பயிரில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை பண்ணை பயிற்சி
பைல் படம்
செய்யாறு அடுத்த வெம்பாக்கத்தில் மணிலா பயிரில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை பண்ணை பயிற்சி திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டாரம் பெருங்கட்டூர் கிராமத்தில் வேளாண் துறை சார்பில் தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மணிலா பயிரில் ஒருங்கி ணைந்த உர மேலாண்மை பண்ணை பள்ளி பயிற்சி வகுப்பு நடந்தது.
வெம்பாக்கம் வட் டார தொழில்நுட்ப குழு அமைப்பாளர் சண்முகம் ஆலோசனையின்படி வெம்பாக்கம் வட்டார வேளாண் அலுவலர் ரேணுகாதேவி பயிற்சி அளித்தார். அப்போது ட்ரைக்கோடெர்மாவிரிடி பூஞ்சான கொல்லிமற்றும் நிலக்கடலை பயிர் ஊக்கிகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
வேளாண் அறிவியல் நிலையத்தின் தொழில் வல்லுனர் நாரா யணன் விவசாயிகளுக்கு மணிலா பயிருக்கு தேவை யான தொழு உரம், தழைச் சத்து, மணிச்சத்து, சாம் பல் சத்து மற்றும் ஜிப்சம் இடுதல், மண் அணைத்தல் குறித்து விளக்கினார். மேலும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழ கத்தின் பயிர் ஊக்கிஒருஏக் கருக்கு நான்கு கிலோவை பயிரிட்ட 30வது நாள் 2 கிலோவும், 45வது நாள் 2 கிலோவும் ஒட்டும் திரவத்துடன் தண்ணீரில் கலந்து தெளிக்கும் முறை குறித்து விளக்கம் அளித்தார். இந்த பயிற்சியில் 25 விவசாயிகள் கலந்து கொண்டனர்.