நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோயிலில் திருவிழா !
மாரியம்மன் கோயில்
பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோயிலில் திருவிழாவை முன்னிட்டு தங்களது வேண்டுதலை திரளாக வந்து நிறவேற்றும் பக்தர்கள்.
பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த ஞாயிற்றுகிழமை இரவு கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தினந்தோறும் பக்தர்கள் அம்மனுக்கு புனித நீர் ஊற்றியும் கோயிலை வலம் வந்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில் குழந்தை வரம் வேண்டிய ஒரு தம்பதியினர் தங்களுக்கு குழந்தை பிறந்ததை அம்மனுக்கு வேண்டுதலாக கரும்பில் தொட்டில் கட்டி தங்களுக்கு பிறந்த குழந்தையை தொட்டிலில் வைத்து கோயிலை வலம் வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இதேபோன்று ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றி வருகின்றனர்.
Next Story