மோகனூர் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

மோகனூர் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

மோகனூர் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு - அக்னிசட்டி, பால்குடம், தீர்த்த குடம் , அலகுகுத்தி நேர்த்திகடன் செலுத்தப்பட்டது.


மோகனூர் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு - அக்னிசட்டி, பால்குடம், தீர்த்த குடம் , அலகுகுத்தி நேர்த்திகடன் செலுத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், மோகனுாரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோரும் சித்திரை திருவிழா, மிக விமர்சையாக கொண்டாடப்படும் இந்த திருவிழா கடந்த ஏப்ரல் 1ந் தேதி காப்பு கட்டி, கம்பம் நட்டு துவங்கியது.தொடர்ந்து, மாரியம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. 15 - நாள் நிகழ்வாக பொதுமக்கள் சார்பாக பால்குடம் , தீர்த்த ஊர்வலம், அக்னிசட்டி எடுத்தல் அலகு குத்துதல், ஏரோ பிளேன் அலகு குத்துதல் நடைபெற்றது .

மோகனூர் காவிரியாற்றிலிருந்தும், மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருக்கோவில் வந்து அடைந்ததும் தங்களது நேர்த்தி கடன்களை செய்தனர். அப்போது மூலவர் மாரியம்மனுக்கு மஹா தீபம் காண்பிக்கப்பட்டன. நேற்று மாலை பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்வும் இன்று செவ்வாய்கிழமை, கிடாவெட்டும், இரவு, 7:00 மணிக்கு, மாவிளக்கு பூஜையும் நடக்கிறது. இரவு, 10:00 மணிக்கு, கம்பம் பிடுங்கி, ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (ஏப்ரல்.17) புதன்கிழமைமாலை, 3:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story