பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் திருவிழா

ஈரோடு மாவட்டம் பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் இலட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் உள்ளது. சுற்றுலா தலமான இக்கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர் கோவை, நீலகிரி மாவட்டங்களிலிருந்தும், அண்டைமாநிலமான கர்நாடகாவிலிருந்தும் இலட்சக்கணக்காண பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவில் இலட்சக்கணக்காண பக்தர்கள் வரிசையில் நாள்கணக்கில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர் இந்நிலையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் 11ம் தேதி இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் குண்டம் திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் திருவீதிஉலா 12ம் தேதி இரவு புறப்பட்டு பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம், உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் திருவீதி உலா நடைபெற்று . மார்ச் 19ம் தேதி இரவு அம்மன் சப்பரம் கோயிலை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி இடப்பட்டது. இன்று அதிகாலை 2 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது குண்டத்தின் முன்புறம் அம்மன் சப்பரம் வந்து சேர்ந்தபின் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. சரியாக 3.45 மணிமுதல் 4 மணிக்குள் பூசாரி பார்த்திபன் குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். இதில் முதியவர் ஒருவர் திடீரென தீயில் விழுந்தார் அவரை தீயணைப்பு துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அதனை தொடர்ந்து மதியத்திற்கு மேல் சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கால்நடைகளை குண்டத்தில் இறக்குவர். குண்டம் இறங்கும்போது கருவறையில் உள்ள பண்ணாரிஅம்மன் வீணை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் குண்டம் இறங்கும் பக்தர்கள் நேரடியாக கோயிலுக்குள் சென்று அம்மனை தரிசித்தனர். குண்டம் திருவிழாவில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். மூவாயிரம் காவல்துறையினர், ஐந்து தீயணைப்பு வாகனம், நூறு இடங்களில் கண்காணிப்பு கேமிரா, முப்பது மருத்துவ தற்காலிக சேவை மையங்கள், தன்னார்வலர்கள் என எவ்வித சிரமும் இன்றி விழா நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது

Tags

Next Story