பெரியநாயகி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா

பெரியநாயகி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா

மயானக் கொள்ளை திருவிழா

சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 8ம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் உற்சவர் அம்மன் சர்வ அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. மூலவர் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனையும், கருவறையில் உள்ள புற்றுக்கு மலர் அலங்காரமும் நடந்தது. நேற்று மயானக் கொள்ளை திருவிழா நடந்தது. அம்மன் காளி அலங்காரத்தில் மணிமுத்தா ஆற்றில் எழுந்தருளினார். அங்குள்ள மயானத்தில் புதைத்து வைக்கப்பட்ட சுண்டல் எடுத்து சூறையாடப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக கள்ளக்குறிச்சி, தியாகதுருகத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இன்று மாலை 3:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது.

Tags

Read MoreRead Less
Next Story