நடுக்காவேரியில் நல்லோ் பூட்டும் விழா

நடுக்காவேரியில் நல்லோ் பூட்டும் விழா

நல்லோ் பூட்டும் விழா

திருவையாறு அருகே நடுக்காவேரியில் நல்லோ் பூட்டும் விழா.
சித்திரை முதல் நாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே நடுக்காவேரி கிராமத்திலுள்ள வயல்களில் நல்லோ் பூட்டும் விழா நேற்று நடைபெற்றது. காவிரிப் பாசன மாவட்டங்களில் ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளில் விவசாயம் தழைத்தோங்குவதற்காக வயல்களில் விவசாயிகள் நல்லோ் பூட்டி வழிபாடு நடத்துவது வழக்கம். இயந்திரமயமாக்கல், கால்நடை வளா்ப்பு குறைவு போன்ற காரணங்களால் நல்லோ் பூட்டி வழிபடுவது குறைந்துவிட்டது. என்றாலும், சில கிராமங்களில் பாரம்பரிய முறைப்படி நல்லோ் பூட்டி வழிபடும் முறை தொடா்கிறது. இதன்படி, திருவையாறு வட்டத்துக்கு உள்பட்ட நடுக்காவேரி கிராமத்திலுள்ள வயல்களில் நல்லோ் பூட்டும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், விவசாயிகள் தங்கள் வீடுகளில் விதை நெல், வெற்றிலை, பாக்கு, பழங்கள் வைத்து பூஜைகள் செய்து, பின்னா் தங்களது உழவு மாடுகளுடன் வயல்களுக்கு சென்று நல்லோ் பூட்டி உழவு பணியைத் தொடங்கினா். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மழை பெய்து விவசாயம் செழித்து, விவசாயிகளும், மக்களும் அனைத்து ஜீவ ராசிகளும் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக நல்லோ் பூட்டி வழிபாடு செய்யப்படுகிறது என்றனா்.

Tags

Next Story