கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி தேரோட்டம்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில்  திருவிழாவையொட்டி தேரோட்டம்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி தேரோட்டம் கோலாகமாக நடந்தது.


கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி தேரோட்டம் கோலாகமாக நடந்தது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட் கள் வைகாசி விசாக பெருந் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான வைகாசி பெருந்திரு விழா கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி இன்று 23- ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் காலை மாலை தேவி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்சிகள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி கோவிலில் இருந்து காலை 7 மணிக்கு வெள்ளி பல்லக்கில் உற்சவ அம்மனை அலங்கரித்து சன்னதிதெரு, தெற்கு ரதவீதி, நடுத்தெரு வழியாக தேர் நிற்கும் கீழரதவீதிக்கு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதன் பிறகு உற்சவ அம்மனை பட்டு மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள செய்தனர். அதைத்தொடர்ந்து தேரில் எழுந்தருளி வந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் விசேஷ பூஜைகள் தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரோட்டம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story