விஜயதசமியை முன்னிட்டு அம்பு விடும் திருவிழா
விருதுநகரில் விஜயதசமியை முன்னிட்டு மகர நோன்பு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
விருதுநகரில் அறநிலையக் கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு சொக்கநாத சுவாமி விஜயதசமி நாளை முன்னிட்டு சந்திர சேகர் அவதாரம் எடுத்து தங்க குதிரை வாகனத்தில் விருதுநகர் மதுரை சாலையில் ஊர்வலமாக வன்னி நந்தவனம் வந்து அங்கு அரசுர்களை அம்பு வீட்டு வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்புகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் இதை அடுத்து இளைஞர்கள் 48 நாள் விரதம் இருந்து கடும் பயிற்சி எடுத்து புலி வேஷம் இட்டும் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பாட்டம் ஆடியவாறு ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர். புலி வேஷம் விடும் இளைஞர்கள் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர்களுக்கும் புலியாட்டம் ஆடி மரியாதை செலுத்தினர்.
Next Story