பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் மஹா சிவராத்திரியில் விழா
எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவில் நான்கு கால பூஜையில் பொதுமக்கள் கண் விழித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
எடப்பாடி அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விடிய விடிய கண்விழித்து நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும். காரிய வெற்றியும் ஏற்படும். 'சிவாய நம' என்று சிந்தித்திருந்தால் 'அபாயம்' நமக்கு ஏற்படாது, 'உபாயம்' நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பிரசன்ன ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயிலில் நான்கு கால சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. இதில் பால், தயிர், மஞ்சள்,திருநீர், இளநீர், பஞ்சாமிர்தம்,போன்ற 16 திரவியங்களால் நஞ்சுண்டேஸ்வரருக்கு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் பொதுமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி நாட்டியஞ்சலி நடைபெற்றது. இதில் சிறுமிகள் கலந்து கொண்டு பொதுமக்கள் அனைவரும் பாராட்டும் வகையில் பரத நாட்டியம் ஆடினர். இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விடிய விடிய கண்விழித்து நீண்ட வரிசையில் நின்று அருள்மிகு பிரசன்ன ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரரை வழிபட்டனர் சென்றனர்.