அட்மா திட்டத்தின் மூலம் வயல் விழா மற்றும் வேளாண் கண்காட்சி

அட்மா திட்டத்தின் மூலம் வயல் விழா மற்றும் வேளாண் கண்காட்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் மூலம் வயல் விழா மற்றும் வேளாண் கண்காட்சி நடைபெற்றது


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் மூலம் வயல் விழா மற்றும் வேளாண் கண்காட்சி நடைபெற்றது

அட்மா திட்டத்தின் மூலம் வயல் விழா மற்றும் வேளாண் கண்காட்சி நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டாரத்தில் வேளாண்மை துறை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் அத்திப்பாடி கிராமத்தில் வயல் விழா மற்றும் வேளாண்மை கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி வேளாண்மை துறை துணை இயக்குநர் முனைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து, வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதல் மற்றும் ஓருங்கிணைந்த பண்ணையம் குறித்து விளக்கினார்.

வேளாண்மை உதவி இயக்குநர் முனைவர் இரா.கருப்பையா இயற்கை விவசாயம், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், ஒருகிராமம் ஒரு பயிர் திட்டம் குறித்து விளக்கினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், பையூர் வேளாண் விஞ்ஞானி இணைபேராசிரியர் முனைவர் திலகம் விதை தேர்வு செய்தல், விதைப்பு,பருவம், பாரம்பரிய இரகங்களை சரியான பருவத்தில் நடவு செய்தல்,கோடை உழவு செய்தல், பயிர்சாகுபடியில் ஓருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறை, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, இயற்கை எருக்களை பயன்படுத்துதலின் நன்மைகள் குறித்தும் பாரம்பரிய இரகங்களை சாகுபடி செய்ய விவசாயிகள் முன் வரவேண்டும் என அறிவுரை கூறினார்.

வேளாண்மை பொறியியல் துறைவேளாண் பொறியாளர் வினோத்குமார்,வேளாண்மை அலுவலர் ஆர்த்தி, உதவி வேளாண்மை அலுவலர் வசந்த், வட்டார தொழில் நுட்ப மேலாளர் சதீஷ்குமார் ஆகியோர் துறை சார்ந்த பல்வேறு கருத்துக்களை கூறினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் சாரதி மற்றும் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்ட தொகுப்பு ஒருங்கிணைப்பாளர் செல்வன், சுபாஷ் ஆகியோர் செய்திருந்தனர். இதில் அட்மா சேர்மேன் அறிவழகன் மற்றும் 100 க்கும் மேற்பபட்ட விவசாயிகள் கலந்துகொன்டனர்.

Tags

Next Story