தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலகத்தில் கள ஆய்வு

தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், தனியார் பள்ளிகளுக்கான பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலகத்தை கள ஆய்வு மேற்கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சியாளர்கள் கவுல்பாளையம் மணிகண்டன் மற்றும் 10 ரூபாய் இயக்கத்தை. சேர்ந்த அண்ணமங்கலம் முருகானந்தம் ஆகியோர் தனியாக பதிவு அஞ்சல் வாயிலாக முறையாக விண்ணப்பம் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 2J-பிரிவின் கீழ் இம்மனுவின் மீது பரிசீலனை மேற்கொண்டு தனியார் பள்ளிகளுக்கான பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் கலாராணி அலுவலகத்தில் கள ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சியாளர்கள் கவுல்பாளையம் எஸ மணிகண்டன் மற்றும் 10 ரூபாய் இயக்கத்தை. சேர்ந்த அண்ணமங்கலம் முருகானந்தம் ஆகியோருடன் கல்வியாளர் மகேஷ்குமரன், சமூக ஆர்வலர்கள் அரசலூர் குப்புசாமி, கைகளத்தூர் பொன்னுசாமி, அசோக் குமார், ஆகியோர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளுக்கான பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் கள ஆய்வு மேற்கொண்டர். இதில் தனியார் பள்ளிகளில் படிக்கும் 25 சதவீத கட்டாய இலவச கல்வி 2009 இன் படி மாணவர்களின் பதிவேடுகள் கோப்புகள் உட்பட பல தகவல்கள் குறித்து காள ஆய்வு மேற்கொண்டு தகவல்களை சேகரித்தனர். இந்த கள ஆய்வின் போது தனியார் பள்ளிகளுக்கான பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் கலராணி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story