வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து கள ஆய்வு

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து கள ஆய்வு - சிறப்பு செயலாளர் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்தில் 27.10.2023 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 27.10.2023 முதல் 09.12.2023 வரை புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் செய்வது தொடர்பாக சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்றது. இந்த வாக்காளர் பட்டியல் திருத்த காலத்தில் 4.11.2023, 5.11.2023, 18.11.2023, 19.11.2023 ஆகிய நான்கு நாட்கள் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் 27.10.2023 முதல் 09.12.2023 வரை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் – 2024-ன் கீழ் பெறப்பட்ட சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்களில் வசந்தபுரம், முதலைப்பட்டி புதூர், நாமக்கல் நகரம் அழகுநகர் ஆகிய பகுதிகளில் இருந்து விண்ணப்பம் செய்தவர்களிடம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / வேளாண்மை-உழவர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளர் முனைவர் பொ.சங்கர், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா முன்னிலையில் தலத்தணிக்கை மற்றும் கள ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் – 2024 தொடர்பாக அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோருடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை, கோரிக்கைகள் அடிப்படையிலான வகைப்பாடு, அவற்றின் மீதான நடவடிக்கைகள், புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து, மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மா.க.சரவணன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சே.சுகந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) த.மாதவன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story