எருமப்பட்டி அருகே பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கள ஆய்வு

எருமப்பட்டி அருகே பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கள ஆய்வு

பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடைநிற்றல் குழந்தைகள் குறித்த களஆய்வு

பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடைநிற்றல் குழந்தைகள் குறித்த களஆய்வு
எருமப்பட்டி பிப்ரவரி 23 எருமைப்பட்டி வட்டாரம் முத்தக்காபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள மாணவிகள் தேவ ஸ்ரீ ஒன்பதாம் வகுப்பு ஜனனி எட்டாம் வகுப்பு ஜோதிவேல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் குடியிருப்பு பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடைநீற்றல் குழந்தைகள் குறித்த கள ஆய்வை எருமப்பட்டி வட்டார கல்வி அலுவலர் அருண் ஆசிரியர் பயிற்றுநர்கள் தனபால் பெரியசாமி பள்ளி ஆசிரியர் சிவகாமி உள்ளிட்டோர் மேற்கொண்டனர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்வியின் அவசியம் குறித்தும் மற்றும் அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைக்கப்பட்டு மூன்று மாணவர்களுக்கும் இன்று முத்தக்காபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மீண்டும் சேர்க்கப்பட்டனர் மேலும் எருமப்பட்டி வட்டாரத்தைச் சார்ந்த அலங்காநத்தம் முட்டாஞ் செட்டி. பொட்டி ரெட்டி பட்டி காவக்காரன்பட்டி. பவித்திரம்புதூர் போடிநாயக்கன்பட்டி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் இடைநிற்றல் மற்றும் இடைநிற்பலுக்கு வாய்ப்புள்ள மாணவர்களை கண்டறியப்பட்டு 24 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்

Tags

Next Story